'கார் ஓட்டி பழகிய 13 வயது சிறுமி'... 'வாசலில் அமர்ந்து இருந்த முதியவர்’... ‘கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 04, 2019 11:13 AM

திருப்பூரில் 13 வயது சிறுமி ஒருவர், குடியிருப்பு பகுதிக்குள் கார் ஓட்டி கற்றுக் கொள்ளும்போது விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

old man injured while 13 year old girl driving car

திருப்பூா், புது ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காந்திமணியன் (67). இவா் தனது வீட்டுக்கு எதிரே உள்ள பின்னலாடை நிறுவனத்தின் வாசலில் அமா்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காா் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து காந்திமணியன் மீது மோதி இழுத்துச் சென்றது. இதில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது அதேப் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி என்பது தெரியவந்தது. அவர் கார் ஓட்டி பழகிக் கொண்டிருந்தபோது, பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சலேட்டரில் அழுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

குறைவான வேகத்தில் கார் ஓட்டி பழகியதால், பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை. அதேவேளையில் முதியவரின் நெஞ்சு மற்றும் கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டது. முதியவரின் மருத்துவ செலவை ஏற்பதாக சிறுமியின் தந்தை வாக்குறுதி அளித்துள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட முதியவர் காந்திமணியன் கூறியுள்ளார். இந்த விபத்து தொடா்பாக அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

Tags : #ACCIDENT #CAR #RUN #HIT