‘வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை’!.. திடீரென சாய்ந்த மேசை’.. நெஞ்சை பதறவைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Dec 05, 2019 12:07 PM

வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் மீது மேசை விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hyderabad 4 year old boy dies after table falls on him

ஹைதராபாத் குகட்பள்ளி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ருக்குமணி (24). இவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு சங்க ரெட்டி மாவட்டத்தில் இருந்து விக்ரம் (5), ரித்திக் ரோஷன் (4) என்ற இரண்டு குழந்தைகளுடன் ஹைதராபாத்தில் குடியேறியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை ருக்மணி மகன் விக்ரமுடன் வெளியே சென்றுள்ளார். மற்றொரு மகனான ரித்திக் ரோஷன் வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டு இருந்துள்ளான். அப்போது வீட்டில் இருந்த மேசை எதிர்பாராதவிதமாக ரித்திக் ரோஷன் மீது விழுந்துள்ளது. இதில் சிறுவனின் நெற்றி மற்றும் மார்பு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

சுமார் 2 மணிநேரம் கழித்து வீடு திரும்பிய ருக்மணி, ரித்திக் ரோஷன் மீது மேசை விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேசை விழுந்து தூங்கிக்கொண்டிருந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #HYDERABAD #DIES #BABY #TABLE