‘சாலை’ தெரியாமல்.. ‘கண் இமைக்கும் நேரத்தில்’.. லாரி மீது மோதிய தனியார் பேருந்து.. கோர விபத்தில் ‘9 பேர் பலி; 23 பேர் காயம்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Dec 05, 2019 12:42 PM
மத்திய பிரதேசத்தில் லாரி மீது தனியார் பேருந்து மோதிய கோர விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் இன்று காலை 6 மணியளவில் சிதி என்ற ஊரை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது கடும் பனிப்பொழிவு காரணமாக நிறுத்தியிருந்த லாரி ஒன்றின் மீது அந்த தனியார் பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் காயமடைந்துள்ள 23 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இது வேகத்தினால் நடந்த விபத்தல்ல, அதிக பனிப்பொழிவினால் சாலை தெரியாமல் இருந்ததாலேயே நடந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.
Tags : #ACCIDENT #MADHYA PRADESH #BUS #TRUCK #DEAD #INJURED
