'கரப்பான் பூச்சி' போல கவிழ்ந்த கார்'...'அந்த நேரத்திலும் இளம்பெண் செஞ்ச அட்ராசிட்டி'...வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Dec 04, 2019 10:38 AM

கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய தருணத்திலும் இளம் பெண்கள் டிக்டாக் வீடியோ செய்து பதிவிட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Teen Films Flippant Tik Tok Video After Car Crash, Gets Slammed

அமெரிக்காவில் இரு இளம்பெண்கள் காரில் சென்று கொண்டிருந்த போது , காரை வளைவு பாதையில் திருப்பிய போது அது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இதில் கார் பல்டி அடித்து தலைகுப்புற கவிழ்ந்தது. நல்ல வேளையாக இரு பெண்களும் உயிர் தப்பினார்கள். இதையடுத்து விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் வருவதற்கு சில நிமிடங்கள் இருந்த நிலையில், விபத்திற்குள்ளான காரில் இருந்த இளம்பெண்கள் இருவரும் டிக்டாக் வீடியோ எடுத்து அதனை பதிவிட்டுள்ளார்கள். அந்த காரில் இருந்த கேட்டி கார்னெட்டி என்ற பெண் கூறும் போது, ''காவல்துறையினர் வரும் வரை காருக்குள்ளேயே இருந்தோம். அந்த நேரத்தில் என்ன செய்வதென தெரியவில்லை. அனைவரும் பயத்திலும் பதட்டத்திலும் இருந்தோம். அந்த மனநிலையை மாற்றவும்.. அதிலிருந்து வெளிவரவுமே டிக்டாக் செய்தோம். உண்மையிலேயே அது எங்களுக்கு நல்ல பலன் தந்தது” என அந்த பெண் கூறியுள்ளார்.

இதனிடையே இதுபோன்ற ஆபத்தான நேரத்திலும் இந்த டிக் டாக் தேவைதானா என நெட்டிசன்கள் பலரும் கண்டித்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Tags : #ACCIDENT #TIKTOK VIDEO #CAR CRASH #TEENS #SLAMMED #HORRIFIC