‘3வது மாடியில்’ இருந்து தவறி விழுந்த ‘2 வயது குழந்தை’.. நொடியில் ‘சாமர்த்தியமாக’ அக்கம்பக்கத்தினர் செய்த காரியம்’.. ‘பதறவைக்கும் வீடியோ’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Dec 04, 2019 02:10 PM
டையூ - டாமனில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை சாலையில் இருந்தவர்கள் பத்திரமாகப் பிடித்து காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

டையூ - டாமனில் உள்ள ஒரு குடியிருப்பின் மூன்றாவது மாடியில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை ஒன்று திடீரென தடுமாறுவதை கீழே சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் கவனித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் கீழே விழுந்த குழந்தையை உடனடியாக துரிதமாக செயல்பட்டுக் காப்பற்றியுள்ளனர்.
நொடியில் குழந்தை விழக்கூடிய இடத்தை சரியாகக் கணித்து அங்கு தயாராக நின்ற அவர்கள் தவறி விழுந்த குழந்தையை கச்சிதமாகப் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாக தற்போது அந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.
#WATCH Daman and Diu: A 2-year-old boy who fell from 3rd floor of a building was saved by locals, yesterday, in Daman. No injuries were reported. pic.twitter.com/bGKyVgNhyM
— ANI (@ANI) December 3, 2019
