‘மனைவியை உயிருடன் புதைத்த கணவன்’!.. விசாரணையில் வெளிவந்த பகீர் காரணம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Dec 07, 2019 01:26 PM

நோய்வாய்ப்பட்ட மனைவிக்கு சிகிச்சை செய்ய பணம் இல்லாததால், மனைவியை கணவன் உயிருடன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man arrested for buried his sick wife alive in Goa

கோவா மாநிலத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி துக்காராம் (46). இவரது மனைவி தான்வி (44). நீண்ட நாள்களாக நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த மனைவிக்கு, அடிக்கடி மருத்துவம் செய்ய வேண்டி இருந்துள்ளது. ஆனால் துக்காராத்திடம் போதிய பணவசதி இல்லாததால் மனைவிக்கு தொடர்ந்து சிகிச்சை செய்ய முடியாமல் தவித்துள்ளார்.

இதனால் மனைவியை கொலை செய்ய துக்காரம் திட்டமிட்டுள்ளார். இதனை அடுத்து நர்விம் என்ற கிராமத்தில் உள்ள கால்வாய் அருகே மனைவியை உயிருடன் புதைத்துள்ளார். திடீரென மனைவி மாயமானதால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் துக்காரத்திடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது நீர்ப்பாசன கால்வாயின் அருகே மனைவியை உயிருடன் புதைத்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தான்வியின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் துக்காரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நோய்வாய்ப்பட்ட மனைவிக்கு சிகிச்சை செய்ய பணமில்லாமல் உயிருடன் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #MURDER #KILLED #GOA #WIFE #HUSBAND #BURIED