‘தலையில் காயம்’!.. ‘சிகரெட் சூடு’.. சென்னையில் 3 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்..! சிக்கிய தாயின் 2வது கணவர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 07, 2019 02:42 PM

சென்னையில் 3 வயது குழந்தையை தாயின் இரண்டாவது கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai 3 years old boy murdered by his mother\'s 2nd husband

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் துர்கா (26). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு சத்யமூர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு வரலட்சுமி (5) என்ற மகளும் அருண் (3) என்ற மகன் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சத்யமூர்த்தி விபத்தில் இறந்துவிட்டார். இதனால் இரு குழந்தைகளையும் தனி ஆளாக வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வெங்கடேசன் என்பவரை துர்கா சந்தித்துள்ளார். வெங்கடேசனும் மனைவியை இழந்தவர் என்பதால் இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். இதனை அடுத்து இருவரும் கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு வந்துள்ளனர். இதனிடையே மகள் வரலட்சுமியை கேரளாவில் உள்ள தனது தங்கையின் வீட்டில் துர்கா விட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 1ம் தேதி மகளைப் பார்ப்பதற்காக துர்கா கேரளா சென்றுள்ளார். அதனால் மகனை வெங்கடேசனிடம் விட்டுவிட்டு சென்றுள்ளார். திடீரென மகன் சாப்பிடும்போது மயங்கி விழுந்துவிட்டதாக துர்காவிற்கு வெங்கடேசனிடமிருந்து போன் வந்துள்ளது. உடனே கேரளாவில் இருந்து புறப்பட்ட துர்கா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மகனை பார்த்துள்ளார். அப்போது குழந்தையின் தலையில் காயம் இருந்துள்ளது. இதுகுறித்து வெங்கடேசனிடம் துர்கா விசாரித்துள்ளார். அதற்கு குழந்தை கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது. இதனை அடுத்து வெங்கடேசன் தனது மகனை கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளதாக காவல் நிலையத்தில் துர்கா புகார் அளித்துள்ளார். மேலும் தனது குழந்தைகளை அவருக்கு பிடிக்கவில்லை என்றும் சிகரெட்டால் சூடு வைத்தும், மது குடிக்க வைத்தும் வெங்கடேசன் குழந்தையை கொடுமை செய்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வெங்கடேசனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் மதுபோதையில் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #CRIME #MURDER #KILLED #CHENNAI #BOY #HUSBAND