தலைமை காவலருக்கு ‘கொரோனா’.. தீவிர கண்காணிப்பில் உடன் வேலை பார்த்த 24 போலீசார்.. மூடப்பட்ட ‘காவல்நிலையம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 21, 2020 10:19 AM

பெரம்பலூரில் தலைமை காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து காவல்நிலையம் மூடப்பட்டுள்ளது.

Kalathur police personnel isolated in Perambur government hospital

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்த தலைமைக் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவருடன் பணியாற்றிய 17 காவலர்கள் மற்றும் 7 ஊர்க்காவல்படையினர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் காவல் நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காவல் நிலையம் மூடப்பட்டுள்ளதால் காவலர்களின் பேருந்து தற்போது காவல் நிலையமாக செயல்பட்டு வருகிறது. அருகில் உள்ள காவல் நிலையங்களில் இருந்து சுழற்சி அடிப்படையில் நாள்தோறும் காவலர்கள் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் களத்தூர் கிராமத்திற்கு வெளியாட்கள் உள்ளே நுழையவும், அங்கிருப்பவர்கள் வெளியே செல்லவும் தடை விதிப்பட்டுள்ளது.

அதேபோல் வி.களத்தூர் கிராமத்தில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த நபர் மற்றும் அவரின் மைத்துனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அக்கிராமம் முழுவதும் சுகாதாரத்துறை அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் பரவலை தடுக்க கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.