“இதுவரைக்கும் லிஸ்ட்லயே சேரல.. புதிதாக இந்த மாவட்டத்தில்.. ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!”.. அமைச்சர் அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 20, 2020 11:52 PM

தமிழகத்தில் புதிதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Pudukottai District has reported its first covid19 positive case

தமிழகத்தில் இன்று மட்டும் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், 2 பேர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து, கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாகவும், அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதேசமயம் 46 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழகத்தில் இதுவரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1520 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இதுவரை கொரோனா பாதித்தோர்கள் வசிக்கும் மாவட்டங்களின் பட்டியலில் சேராமல் இருந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.