‘இப்போதைக்கு இதெல்லாம் கிடையாது’... ‘இந்திய நிறுவனத்தின் அதிரடி முடிவு’... ‘ஏமாற்றத்திலும், மூன்று ஆறுதலான விஷயங்கள்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 21, 2020 12:10 AM

கொரோனாவின் விஸ்வரூபத்தால் சம்பளம் கிடைக்குமா, வேலை தப்புமா என ஐ.டி. ஊழியர்கள் தவித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் 5 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

Infosys suspends promotions and salary hikes, no layoffs

வருடம் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து, ஏப்ரல், மே மாதங்களில் சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்டவற்றை எல்லாம் கனவில் மிதந்து கொண்டு இருந்தவர்களுக்கு எல்லாம் பெரிய இடியை இறக்கி இருக்கிறது இந்த கொரோனா வைரஸ். இந்த நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய ஐடி கம்பெனிகளில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனம், தனது ஊழியர்களுக்கு தற்காலிகமாக பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுகளை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கருத்தில் கொண்டு இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பட்ட கஷ்டத்திற்கு பலன் இல்லாமல் போய்விட்டதே என்ற சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், இந்த இக்கட்டான சூழ்நிலையை காரணம் காட்டி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என ஆறுதல் செய்தியையும் இன்ஃபோசிஸ் நிறுவனம் அளித்துள்ளது.

அதேபோல், இந்த ஆண்டுக்கென ஏற்கனவே வேலைக்கு தேர்வு செய்திருக்கும் அத்தனை பேரையும் வேலையில் எடுத்துக் கொள்ள இருப்பதாகச் இன்ஃபோசிஸ் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் அடுத்த வருடத்திற்கு 35,000 பேரை வேலைக்கு எடுக்கவும் இன்ஃபோசிஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. இதேபோல் கடந்த வாரம் முன்னணி நிறுவனமான டிசிஎஸ் இதே கொள்கையை அறிவித்திருந்தது. இந்தியாவின் இரு பெரிய ஐடி கம்பெனிகளும், தங்கள் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுகளைக் கொடுக்கவில்லை என்பது வருத்தம் தான்.

இருப்பினும், வேலைக்கு தேர்வு செய்தவர்களை வேலையில் சேர்த்துக் கொள்வதும் ஒரு வித ஆறுதலாக இருக்கிறது. இது குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ‘93 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது. எனினும் மோசமான இந்த சூழ்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதை உறுதி செய்வது மிக சவாலான விஷயமான உள்ளது. எனினும் நாங்கள் சற்று வலுவுடன் இணைந்து, நல்ல சேவையை அளித்து வருகிறோம் என்றும்’ தெரிவித்துள்ளார்.