‘பதைபதைக்கும் வெயிலில்’.. ‘கைக்குழந்தையை’ தூக்கிக் கொண்டு 10 நாட்கள்..!’.. பெண் செய்த கண்கலங்க வைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 3 மாத கைக்குழந்தையுடன் பெண்ணொருவர் 10 நாட்களாக நடந்தே மகாராஷ்டிராவுக்குச் சென்றுள்ள சம்பவம் நடந்தேறியுள்ளது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக தற்போது வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தினத் தொழிலாளர்கள் பலரும் வறுமையை சமாளிக்க முடியாமலும், வருமான பிரச்சனையினாலும் தத்தம் சொந்த ஊர்களை நோக்கி ஆங்காங்கே படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
ஆனால் லாக்டவுனால் பொதுப்போக்குவரத்து வசதிகள் தடை செய்யப்பட்டுள்ளதால் மக்கள் நடந்தே செல்லவும் தொடங்குகின்றனர். இந்நிலையில் பதைபதைக்கும் வெயிலில் கதகதப்பான 3 மாத கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு ஹைதராபாத்திலிருந்து மகாராஷ்டிராவுக்கு செல்வதற்காக 10 நாட்கள் நடந்து நாக்பூர் வரையில் சென்றுள்ளார்.
Tags : #CORONA #CORONAVIRUS
