‘நான்கு நாட்களாக’... ‘இந்த 8 மாவட்டங்களில்’... ‘எந்த புதிய பாதிப்பும் இல்ல’... ‘கட்டுக்குள் வரும் கொரோனா’???

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 20, 2020 11:55 PM

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக 8 மாவட்டங்களில் கொரோனா தொற்றால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.

No new cases registered for past 4 days in 8 Districts

தமிழகத்தில் ஆயிரத்து 520 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிக்காத மாவட்டமாக இருந்த புதுக்கோட்டையிலும் இன்று ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த நாட்களை பொறுத்தவரை, சேலம், ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், குமரி, திருவண்ணாமலை, நீலகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய 8 மாவட்டங்களில் கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை.

மேலும் கோவை, ஈரோடு, நெல்லை, தஞ்சை, கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் புதிதாக இன்று கொரோனா பாதிப்பு இல்லை. கொரோனாவை விரட்ட முழுவீச்சாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.