எங்க மாநிலம் 'கொரோனால' இருந்து மீண்டுருச்சு... மகிழ்ச்சியுடன் 'அறிவித்து' நன்றி தெரிவித்த முதல்வர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Apr 20, 2020 11:01 PM

கொரோனாவில் இருந்து தங்களது மாநிலம் மீண்டுள்ளதாக, மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்.

Manipur and Goa declared COVID-19 free as all patients recover

இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மஹாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்கள் திகழ்கின்றன. இதனால் ஊரடங்கு தளர்வு எதுவும் இந்த மாநிலங்களில் அமல்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அடுத்தடுத்து 2 மாநிலங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுள்ளன. முன்னதாக கோவா மாநிலம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்து இருந்தார்.

தொடர்ந்து மணிப்பூர் மாநிலம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டதாக அம்மாநில முதல்வர் பைரன் சிங் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ''கொரோனா பாதிப்பில் இருந்து முழு அளவில் மணிப்பூர் விடுபட்டு உள்ளது என்ற தகவலை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சிகிச்சை பெற்ற 2 நோயாளிகளும் முழு அளவில் மீண்டு உள்ளனர்.  அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.  மணிப்பூரில் புதிய பாதிப்புகள் எதுவும் இல்லை.  மக்கள் ஒத்துழைப்பு, மருத்துவ பணியாளர் மற்றும் ஊரடங்க நடவடிக்கைகளால் இது சாத்தியப்பட்டது,'' என தெரிவித்து இருக்கிறார்.

நாட்டிலேயே குறைந்த அளவு பாதிப்பாக மணிப்பூரில் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகினர். தற்போது அவர்களும்  முழுமையாக மீண்டு வந்துள்ளதால் கொரோனா இல்லாத 2-வது மாநிலம் என்ற பெயரை மணிப்பூர் பெற்றுள்ளது.