ஊரடங்கிற்கு பின் 'பாதிப்பு' அதிகரித்தாலும்... 'இது' குறைவே... மத்திய அரசு வெளியிட்டுள்ள 'ஆறுதல்' செய்தி...
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கு நடவடிக்கைக்கு பின் இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் காலம் 7.5 நாட்களாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டி நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்படும் வேகம் குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால், "ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 3.4 நாட்களாக இருந்தது. ஆனால் தற்போது பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 7.5 நாட்களாக அதிகரித்துள்ளது. அதாவது கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு ஓரளவுக்கு குறைந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
