'சீனாவில்' விசாரணை... 'வுஹானுக்குள்' நுழைய 'அனுமதி' இல்லை... 'முற்றும்' மோதலால் 'பரபரப்பு'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க குழுவை வுஹானுக்குள் அனுமதிக்க முடியாது என சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

முதல்முதலாக வுஹான் நகரில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது எனக் கூறப்பட்டுவந்த நிலையில், சமீபத்தில் அங்குள்ள ஆய்வகத்தில் இருந்துதான் வைரஸ் பரவியது என ஒரு குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் எங்கிருந்து பரவியது என்பதைக் கண்டறிவதற்காக தங்களுடைய விசாரணைக் குழு ஒன்றை வுஹான் நகருக்குள் அனுமதிக்க வேண்டும் என முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங், "கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் பொது எதிரி. அந்த வைரஸ் உலகின் எந்தவொரு நாட்டிலும் எந்த நேரத்திலும் தோன்றலாம். இதில் சீனாவை குற்றஞ்சாட்ட வேண்டாம். வைரஸ் பரவத் தொடங்கிய முதல் நாளிலிருந்து அதுதொடர்பான தகவல்களை நாங்கள் உலக நாடுகளிடம் வெளிப்படையாக பகிர்ந்து வருகிறோம். அதனால் சீனா கொரோனா வைரஸை உருவாக்கி பரப்பவில்லை என்பதை அமெரிக்கா உணர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
