‘இரவு, பகல் பாராமல்’... ‘கடைசி மூச்சு வரை செவிலியர் பணி’... ‘வெளியான உருக்கமான தகவல்’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Apr 20, 2020 09:27 PM

இங்கிலாந்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவர், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

UK Witney nurse 84 who working night shifts dies of coronavirus

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் மார்கரெட் டாப்லி (Margaret Tapley) என்ற செவிலியர் ஓய்வு பெற்றவர். எனினும் கொரோனாவின் கோரத் தாண்டவத்தால், 84 வயதிலும், மார்கரெட் வீட்டில் முடங்கியிருக்கவில்லை. இரவு பகல் பாராமல்  கொரோனாவுக்கு எதிராக மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். கடைசியில் இவரையும் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால் அவரது குடும்பம் கலங்கி நின்றாலும், அவரது மன உறுதியை கண்டு திகைத்து உள்ளனர்.

இதுகுறித்து அவரது பேத்தி ஹன்னா டாப்லி பேசுகையில், “நான் என் வாழ்க்கையில் சந்தித்த வலிமை மிகுந்த பெண் அவர். துரதிர்ஷ்டவசமாக அவர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துவிட்டார். என்னுடைய பெற்றோரைப் போலத்தான் கருதினேன். அவர் இல்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது. அவரை என் பாட்டி எனச் சொல்வதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது. அவர் கடினமான உழைப்பாளி அதேநேரத்தில் அனைவரின் மீது அக்கறை கொண்ட பெண்மணி.

தன் வாழ்க்கையை மற்றவர்களுக்காக அர்ப்பணித்துள்ளார். தினமும் மெசேஜ் இல்லையென்றால் போனில் எதாவது பேசுவார். நான் அவரை மிஸ் செய்கிறேன். எல்லாவற்றிலும் எனக்கு ஆதரவாக இருந்தார். இந்தச் சூழலுக்கு நான் எப்படி மாறுவேன் எனத் தெரியவில்லை. எங்கிருந்தாலும் அவர் என்னையும் எங்களது குடும்பத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் என நம்புகிறேன். நாங்கள் அவரை மிகவும் நேசித்தோம்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.

மார்கரெட் மற்றொரு பேரக்குழந்தை டாம் வுட் செவிலியராக இருக்கிறார். அவர் பேசுகையில், “நான் இன்று ஒரு செவிலியராக இருக்கிறேன் என்றால் அதற்கு அவர்தான் காரணம். தான் ஒரு செவிலியர் என்பதில் பெருமிதத்தோடு இருந்தார். எல்லோரிடமும் மிகவும் அன்பாக நடந்துகொள்வார்” எனப் பெருமித்தோடு கூறினார்.