'கோடிகளில்' வருமானம் இருந்தும்... லாக்டவுனை 'சமாளிக்க' முடியாமல்... 'தொழிலதிபர்' செய்யும் காரியம்!...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 21, 2020 12:50 AM

ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் டெலிவரி பாயாக வேலை செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Corona Lockdown Bored Russian Businessman Becomes Delivery Guy

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா, சீனா, இத்தாலி, ஸ்பெயின்,  ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலபதிபர் ஒருவர் ஊரடங்கில் தினமும் இந்திய மதிப்பில் 1,000 முதல் 1,500 ருபாய்க்கு டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். ஊரடங்கால் நீண்ட நாட்களாக வீட்டிலே இருந்த மாஸ்கோ நகரைச் சேர்ந்த தொழிலதிபர் செர்ஜேய் நோச்சொவ்னிக்கு வீட்டிலேயே இருப்பது போர் அடித்துள்ளது.

அப்போதுதான் அவர் மக்களின் நடமாட்டத்தைக் குறைக்க உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவை டோர் டெலிவரி செய்யப்படுவதை கவனித்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக டெலிவரி பாயாக வேலைக்குச் சேர்ந்துள்ளார். தற்போது தினமும் சுமார் 20 கிலோ மீட்டர் வரை நடந்து சென்று உணவுப் பொருள்களை அவர் டோர் டெலிவரி செய்து வருகிறார். செர்ஜேய் நடத்தி வரும் கன்சல்ட்டிங் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 15 கோடி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்துப் பேசியுள்ள செர்ஜேய், "இந்தப் புதிய வேலை எனக்கு உடலளவில் அதிக நம்பிக்கை தருகிறது.  எங்களுடைய மஞ்சள் நிற ஆடைகள்தான் வாடிக்கையாளர்களால் கவனிக்கப்படுகிறது. டெலிவரி செய்யும் நபர்களை அவர்கள் கவனிப்பதில்லை. மேலும் டெலிவரி நிறுவனத்துடன் என்னுடைய நிறுவனம்  புதிதாக ஒப்பந்தம் ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளது. லாக் டவுனை மறுபக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பாக இதைப் பயன்படுத்தி வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.