83 ஆயிரத்திற்கும் மேல் 'பாதிப்பு'... 5 ஆயிரத்தை தாண்டிய 'பலி' எண்ணிக்கை... 'தீவிர' பாதிப்பிலும் ஊரடங்கை 'தளர்த்தியுள்ள' நாடு... நிபுணர்கள் 'எச்சரிக்கை'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 20, 2020 09:41 PM

ஈரானில் தீவிர கொரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையிலும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டி ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

Corona Lockdown Iran Opens Up As Economic Woes Trump Fears

கொரோனாவால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள நாடுகளில் ஒன்றான ஈரானில் இதுவரை 83,505 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களில் 5,209 பேர் உயிரிழந்துள்ளனர். 59,273 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 91 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பொருளாதார நோக்கில் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இதையடுத்து இன்று  ஈரானில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் திறக்கப்பட்டு, வணிக வளாகங்கள் செயல்படுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத்தொடர்ந்து ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.