'சென்னையின் பிரபல கார் விற்பனை நிறுவன அதிபர் 'தற்கொலை'....காரணம் என்ன?...அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Sep 12, 2019 01:42 PM

பிரபல பெண் தொழிலதிபர் ரீட்டா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

lanson toyota joint director Reeta Lankalingam committed suicide

சென்னையில் உள்ள பிரபல கார் விற்பனை நிறுவனம் லேன்சன் டொயோட்டா. இதன்  நிர்வாக இயக்குனராக இருப்பவர் லங்காலிங்கம். இவருடைய மனைவி ரீட்டா  லங்காலிங்கம். இவர் அந்த நிறுவனத்தின் இணை இயக்குனராக செயல்பட்டு வருகிறார். இவர்கள் சென்னை நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வாசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தனது வீட்டில்  ரீட்டா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த நுங்கம்பாக்கம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கிடையே அவர் தற்கொலை செய்வதற்கு விற்பனையில் ஏற்பட்ட நஷ்டமா அல்லது கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறர்கள். பிரபல பெண் தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SUICIDEATTEMPT #LANSON TOYOTA #REETA LANKALINGAM