'காரணம் ப.சிதம்பரம்தான்'.. 'மோடிஜி எனக்கு ஒரு உதவி?'.. ராணுவ விமான அதிகாரியின் உருக்கமான தற்கொலை கடிதம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Sep 10, 2019 02:12 PM
அஸ்ஸாமில் ஓய்வு பெற்ற ராணுவ விமான அதிகாரி உத்தரபிரதேசத்தின் ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்துகொண்டார்.
உத்தரபிரதேசத்தின் அலகாபாத்தில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் 55 வயதான பிஜான் தாஸ் என்கிற இந்த ராணுவ விமான அதிகாரி, தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் அவர் தற்கொலைக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது தற்கொலைக்கான காரணம் குறித்த கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தின் 5வது பக்கத்தில், தனது மோசமான பொருளாதார நெருக்கடிதான் தன்னை தற்கொலைக்கு தள்ளியது என்றும், நாட்டின் தற்போதைய மோசமான பொருளாதார நிலைக்குக் காரணம் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம்தான் என்றும், தற்போதைய பாஜக-மோடி அரசின் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட திட்டங்கள் காரணமல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், தனது இறுதிச் சடங்கிற்காக 1500 ரூபாயும், தான் தங்கியிருந்த அறைக்காக 500 ரூபாயும் பணமாக அந்த கடிதத்தின் மேல் பிஜான் தாஸ் வைத்திருந்துள்ளது தெரியவந்தது. இத்தனை சோகத்துக்கு மேலாக, பாடகராக விரும்பி சரிகம லிட்டில் சாம்பியன் பாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பாடும் தனது மகன் விவேக் தாஸ் பாடகராவதற்கு உதவுமாறும் பிஜான் தாஸ், தனது தற்கொலை கடிதத்தில் மோடியைக் கேட்டுக்கொண்டுள்ளார்.