‘கழிவறையில் செல்போன் கேமரா!’ .. ஐஐடி சென்னை கல்லூரி மாணவிகளை வீடியோ எடுத்த உதவிப் பேராசிரியர்? நடுங்க வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 20, 2020 01:03 PM

சென்னை ஐஐடி பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து பெண்களை வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் உதவி பேராசிரியரின் செயல் நடுங்க வைத்துள்ளது.

ஐஐடி சென்னை பெண்கள் கழிவறையில் கேமரா | IIT-Madras Scholars films girls

சென்னை ஐஐடி பெண்கள் கல்லூரியில் உள்ள விண்வெளி பொறியியல் துறை ஆய்வுக்கூடத்தின் பெண்கள் பயன்படுத்தும் கழிவறைக்குள் சென்ற ஆராய்ச்சிப் படிப்பு மாணவி ஒருவர், அங்கு தண்ணீர் குழாய்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்ட செல்போனைக் கண்டுபிடித்துள்ளார்.

இதனை அடுத்து ஆண்கள் கழிவறையில் மறைந்திருந்த உதவி பேராசிரியர் ஒருவர்தான் தனது செல்போனை பெண்கள் கழிவறையில் மறைத்து வைத்ததாகவும், இவ்வாறு மறைத்து வைத்து பெண்களை 3 மாதமாக வீடியோ எடுத்ததாகவும் தெரியவந்தது. அதன் பிறகு அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட அவர், தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், மேற்கொண்டு கல்லூரி பெண்களிடம் விசாரித்து வருவதாகவும் கோட்டூர்புரம் போலீஸாரைத் தொடர்பு கொண்டு பேசியபோது நம்மிடையே தெரிவித்துள்ளனர்.

Tags : #CHENNAI #IITMADRAS