கஞ்சா போதையில் 'கிளியோபாட்ராவாகத்' தெரிந்த '80 வயது' பாட்டி... 'அத்துமீற' முயன்ற இளைஞரால் 'பரபரப்பு'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 18, 2020 06:48 PM

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கஞ்சா போதையில் இருந்த வாலிபர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Furious by a young man who tried to misbehave Old lady

சென்னை மீனபாக்கம் அடுத்த நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. 80 வயதான இவர் வீட்டில் தனியாக இருந்த போது கதவை திறந்து அத்துமீறி வாலிபர் ஒருவர் உள்ளே நுழைந்து மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

அப்போது மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அந்த மர்ம நபரை பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் பழவந்தாங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார் மர்ம நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் தினேஷ் என்பது தெரியவந்தது.  மேலும்  அவர் அதிக அளவில் கஞ்சா போதையில் இருந்ததாகவும் அதனால் தான் வீட்டிற்குள் நுழைந்து இளம் பெண் என்று நினைத்து மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் ஒப்புக்கொண்டார்.

பின்னர் அவர் மீது பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : #CHENNAI #NANGANALLUR #MISBEHAVE #YOUNG MAN #OLD LADY