VIDEO: ‘தூங்குவதுபோல் நடித்து’.. மர்மநபர் செய்த அதிர்ச்சி காரியம்.. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தூங்குவதுபோல் நடித்து நோயாளியின் உறவினரிடம் செல்போன், பணத்தை மர்மநபர் கொள்ளையடித்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஏலகிரி பகுதியை சேர்ந்தவர் பவானி. இவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இவரை காண்பதற்கு திருவண்ணாமாலை மாவட்டம் செங்கத்தை அடுத்த இறையூரை சேர்ந்த பவானியின் உறவினர் முருகன் உட்பட 5 பேர் வந்துள்ளனர். இரவு உறவினர்கள் அனைவரும் வார்டுக்கு வெளியே உள்ள வராண்டாவில் தூங்கியுள்ளனர்.
அப்போது மருத்துவமனைக்கு உள்ளே வந்த மர்மநபர் அவர்களுக்கு அருகில் தூங்குவதுபோல் நடத்து மெதுவாக முருகன் பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இவை அனைத்தும் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதி்வாகியுள்ளது. இதனை அடுத்து செல்போன், பணம் திருடுபோனது குறித்து முருகன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
