"எரிமலையின் ஓரத்தில் நின்று மகுடி வாசிக்க பாக்காதிங்க..." "அது எப்ப வெடிக்கும்னு தெரியாது..." எச்சரிக்கை விடுக்கும் 'அரசியல்' தலைவர் 'யார்' தெரியுமா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 21, 2020 12:41 PM

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எந்த காரணத்தை கொண்டும் திரும்பப் பெற மாட்டோம் என்று கூறும் பிரதமர் மோடி, எரிமலையின் ஓரத்தில் உட்கார்ந்து மகுடி வசித்து கொண்டு இருக்கிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

we dont know when the volcano will erupt vaiko press meet

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று 2,05,000 கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எந்தக் காரணத்தை கொண்டும் திரும்பப் பெற மாட்டோம் என்று கூறும் பிரதமர் மோடி, எரிமலையின் ஓரத்தில் உட்கார்ந்து மகுடி வாசித்து கொண்டு இருக்கிறார் என்றும், எரிமலை எப்போது வெடிக்கும் என்று தெரியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சமணர்கள், சீக்கியர்கள் என எல்லா தரப்பினரும் இஸ்லாமியர்களுடன் சகோதர்களாக தான் இருப்பார்கள். தமிழக வரலாற்றில் நடக்காத ஒரு போராட்டத்தை அவர்கள் நடத்தி உள்ளதாக கூறினார்.

மேலும் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் கட்டுபாட்டுடன் நடந்து கொண்டனர். சாலையில் கிடந்த பொருட்களையும் அப்புறப்படுத்திவிட்டு சென்றனர் எனக் கூறினார்.

Tags : #CHENNAI #AIRPORT #VAICO #PRESSMEET #PRIME MINISTER #MODI