'கடையோட பூட்ட உடைச்சு... கல்லா பெட்டிய தொட்டுக்கூட பார்க்காத திருடன்!'... அப்புறம், என்ன திருடியிருப்பான்?... 'சென்னையில் பரபரப்பு!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கொரட்டூர் பகுதியில் உள்ள இரண்டு கடைகளின் பூட்டை உடைத்த திருடர்கள், பணத்திற்கு பதிலாக சிகரெட் பண்டல்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரட்டூர் சிக்னல் அருகே அம்பத்தூர் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதில் சுந்தரம் என்பவர் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையின் அருகே கார்த்தி என்பவர் டீ கடை மற்றும் டிபன் கடை வைத்து உள்ளார்.
இன்று காலை 2 கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. கல்லா பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் பணம் கொள்ளை போகவில்லை. ஆனால் 2 கடைகளிலும் இருந்த சிகரெட் பண்டல்களை திருடர்கள் அள்ளிச் சென்று இருந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags : #ROBBERY #CHENNAI #KORATTUR #SHOPS
