'எல்லார் முகத்துலயும் முகமூடி...' 'மிட்நைட்ல பயங்கர சத்தம்...' 'எந்திரிச்சு பார்த்தா...' - பதற்றத்தின் உச்சிக்கு சென்ற குடும்பத்தினர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் மாவட்டத்தின் கிராமத்தில் நள்ளிரவில் வீடுபுகுந்த முகமூடி திருடர்கள் 40 பவுன் நகை, ரூ. 1.74 லட்சம் ரூபாய் வரை கொள்ளயடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூர் பேரூராட்சி, குமரன் மலை அடிவாரம் ராயர்பாளையத்தில் காட்டுப் பகுதியில் வசித்து வருகிறார் 35 வயதான ஸ்டீபன். விவசாயியான இவர் வேப்பூரிலுள்ள தனியார் பள்ளி பங்குதாரராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை (04.02.2021) நள்ளிரவு 1 மணியளவில் ஸ்டீபன்அவர்களின் வீட்டின் உள்புறம் தாழிபாழை திறக்க முயன்ற திருடர்கள், கதவை இரும்புக் கம்பியால் அடித்து உடைத்து வீட்டினுள் நுழைந்துள்ளனர்
சத்தம் கேட்டு எழுந்த அனைவரும் முகமூடி கொள்ளையர்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் வீட்டினுள் நுழைந்த திருடர்கள் பீரோவில் இருந்த நகைகளைத் திருடியதோடு, பெண்கள் அணிந்திருந்த நகைகளையும் கேட்டுள்ளனர்.
உயிர் பயத்தில் வீட்டுப் பெண்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றிக் கொடுத்துள்ளனர். மொத்தம் 27 பவுன் நகைகள், ரூ.1.20 லட்ச ரூபாயை திருடிய முகமூடி திருடர்கள், பக்கத்து வீட்டு அருகே இருந்த விவசாயி குமரன் (72) என்பவரது வீட்டிலும் இதே போல் நுழைந்து, அவரது வீட்டிலிருந்த 13 பவுன் நகைகளையும், 54 ஆயிரம் ரொக்கத்தையும் திருடியுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து அறிந்த சேலம் எஸ்.பி. தீபா கனிகர் உத்தரவின் பேரில் ஆத்தூர் டி.எஸ்.பி. இம்மானுவேல் ஞானசேகரன், வீரகனூர் இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் கொள்ளைச் சம்பவங்கள் நடந்த வீடுகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த முகமூடி கொள்ளையர்களை பிடிக்க ஆத்தூர் டி.எஸ்.பி. இம்மானுவேல் ஞானசேகரன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, முகமூடி கொள்ளையர்களை உடனடியாக பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
