சர்வ சாதாரணமாக ‘ஓனர்’ மாதிரி உள்ளே வந்த நபர்.. காட்டிக்கொடுத்த ‘சிசிடிவி’.. அதிரவைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பட்டப்பகலில் திறந்திருந்த கடையில் கல்லாப்பெட்டியை உடைத்து பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் சீராலன் என்பவர் எலக்ட்ரிகல்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் சாப்பிடுவதற்காக கடைக்கு பின்னால் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கடையில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர் ஒருவர் கடை ஓனர் போல சர்வ சாதாரணமாக உள்ளே நுழைந்துள்ளார்.
பின்னர் கடையில் இருந்த கல்லாப்பெட்டியை உடைத்து, அதில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளார். சாப்பிட்டுவிட்டு கடைக்கு வந்த சீராலன், கல்லாப்பெட்டி உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் மர்ம நபர் ஒருவர் சாதரணமாக கடைக்குள் நுழைந்து பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சிசிடிவி காட்சிகளில் அடிப்படையில் அந்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
