பார்க்க தான் ஆத்து ‘மணல்’ மாதிரி இருக்கும்.. ‘ஆனா உண்மையில..!’.. அதிகாரிகளை அதிரவைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் அருகே போலி மணல் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மணிவிழுந்தான் பகுதியில் சட்ட விரோதமாக போலி தயாரிக்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து தாசில்தார் அன்புச்செழியன் தலைமையில் மணிவிழுந்தான் பகுதியில் இயங்கி வந்த போலி மணல் ஆலைக்கு போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அருகே உள்ள ஏரியில் இருந்து மண்ணை கடத்தி வந்து, அதை சுத்திகரித்து லாரிகள் மூலம் கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களிடம் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகையான மணல் பசைத்தன்மை இல்லாமல் இருப்பதால், இவற்றின் மூலம் கட்டப்படும் கட்டுமான பணிகளின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில் போலி மணல் தயாரிக்க பயன்படுத்திய இயந்திரம், 60 டன் மணல் மற்றும் ஜேசிபி இயந்திரம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலி மணல் தயாரித்த தமிழரசன், சதீஷ்குமார், ஷாஜகான், பிரபு, பிரபாகரன் ஆகிய 5 பேர் மீது கனிமவளங்களை திருடுதல், மணல் கொள்ளை, சட்ட விரோதமாக ஆலை நிறுவியது உள்ள பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். போலி மணலால் ஏற்படும் விளைவுகள் மிகவும் ஆபத்தானது என்பதை உணராமல் சிலர் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
