BSNL-உடன் கைகோர்த்து “YUPPTV ஸ்கோப் பிளாட்பார்ம்”-ஐ அறிமுகப்படுத்தும் YUPPTV!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sivasankar K | Feb 04, 2021 03:20 PM

ஒற்றை சந்தாவின் கீழ் ஒரே தளத்தில் SonyLiv, ZEE5, Voot Select & YuppTV போன்ற நேரடி தொலைக்காட்சி சேனல்கள் தொகுப்புடன் பல முன்னணி ஓடிடி சேவைகளை தற்போது வழங்குகிறது YuppTV.

YuppTV Partners with BSNL to launch YuppTV Scope Platform Trending Now

ஐதராபாத், பிப்ரவரி 3, 2021: உலகளாவிய ஓடிடி தளமான YuppTV, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) உடன் சேர்ந்து, நவீன, தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஒற்றை சந்தா வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான  YuppTV ஸ்கோப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. டிரிபிள் பிளே சலுகையாக பிராட்பேண்ட் சந்தா தாரர்களுக்கு தொகுக்கப்பட்ட ஓடிடி சேவைகளை வழங்க பிஎஸ்என்எல் உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட YuppTV இப்போது பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் பயனர்களுக்கு மிகக் கவர்ச்சிகரமான வீடியோ சேவைகளை அறிமுகப்படுத்துகிறது.

இதுபோன்ற ஒரு தனித்துவமான சேவையை வழங்கும் உலகின் முதல் தளமாக இருப்பதால், YuppTV ஸ்கோப் பயனர்களுக்கு சோனிலிவ்,  SonyLiv, ZEE5, Voot Select & YuppTV- நேரடி டிவி சேனல்களின் ஒருங்கிணைப்பு சேவை போன்ற அனைத்து பிரீமியம் ஓடிடி ஆப்களுக்கும் ஒற்றை சந்தாவை வழங்குகிறது. அதே நேரத்தில் பல ஆப்களை அணுகுவதற்கும் நிர்வகிப்பதற்கும் இருக்கும் சிரமங்களை இதன் மூலம் அகற்றி அவற்றை எளிமைப்படுத்துகிறது. கண்டண்ட் பார்ட்னர்கள், ஒளிபரப்பாளர்கள், தொலைத்தொடர்பு மற்றும் பிராட்பேண்ட் வழங்குநர்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய பங்குதாரர்களுடன், வாடிக்கையாளர்களுக்கும் சேர்த்து ஒரு தனித்துவமான தடையற்ற சேவையை வழங்குவதற்கான ஒரு சூழல் அமைப்பை வழங்கக் கூடிய எஸ்ஏஏஎஸ் (SAAS)சேவை தளமாக YuppTV உருவாகிறது.

மக்களின் அபிமான பிஎஸ்என்எல்லுக்கு பரந்த வாடிக்கையாளர்கள் உள்ளதைக் கருத்தில்கொண்டு, இந்த தளம் அனைத்து பயனர்களுக்கும், தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கும், வழக்கமான கேபிள் டிவி பயனர்களுக்கும் சேவையை வழங்குகிறது. கேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கும், கேபிள் டிவியுடன் இணைந்திருக்கும் நுகர்வோருக்கு ஒரு பாரம்பரிய டிவி போன்ற அனுபவத்தை இந்த குதளம் வழங்குகிறது. அதே நேரத்தில் நேரடியாக தொலைக்காட்சி சேனல்களை தடையின்றி மாற்றப்படவும் இது அனுமதிக்கிறது. AI மற்றும் ML திறன்களைப் பயன்படுத்தும்போது நிபுணர்களின் குழுவால், நிர்வகிக்கப்படும் பார்வையாளர்களின் பரிந்துரையின் அடிப்படையில் தனிப் பயனாக்கப்பட்ட YuppTV ஸ்கோப் இப்போது மிகவும் மேம்பட்ட அனுபவத்தை வழங்குகிறது. பொருத்தமான சேனல் கண்டண்ட்களை கண்டுபிடிப்பதற்கு எளிதாக, முன்னெப்போதும் இல்லாத பல பயன்பாடுகளை இப்போது வழங்குகிறது.  ஸ்மார்ட் டிவி, பிசி, மொபைல், டேப்லெட் மற்றும் ஸ்ட்ரீமிங் மீடியா பிளேயர்கள் உள்ளிட்ட சாதனங்கள் மூலம் YuppTV ஸ்கோப்பை அணுகக் கூடிய கிராஸ்- பிளாட்ஃபார்ம் சேவையும் இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, நேரடி டிவியைப் பார்க்கும்போது பயனர்கள் நேரடி சாட்களை மேற்கொள்ளலாம், நேரடி வாக்கெடுப்புகளிலும் பங்கேற்கலாம், மேலும் அவர்கள் விரும்பும் கண்டண்ட்களையும் கோரலாம்.

இந்த அறிமுகம் குறித்து YuppTVயின் நிறுவனர் மற்றும் சிஇஓ, திரு. உதய் ரெட்டி கூறும்போது, “பிஎஸ்என்எல் உடன் இணைந்து எங்கள் ஒற்றை சந்தா ஓடிடி தளமான YuppTV ஸ்கோப்பை அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தத் துவக்கத்தின் மூலம், முக்கிய கண்டண்ட் பார்ட்னர்கள், ஒளிபரப்பாளர்கள், தொலைத்தொடர்பு மற்றும் பிராட்பேண்ட் வழங்குநர்கள் ஒன்றிணைந்து இத்தொழில்துறையில் உள்ள அனைத்து முக்கிய பங்கு தாரர்களுக்கும் ஒரு முழுமையான சூழல் அமைப்பை உருவாக்க நாங்கள் உதவுகிறோம். தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, அனைத்தையும் உள்ளடக்கிய இந்த தளத்தைப் பயன்படுத்தி, இந்த தனித்துவமான மற்றும் தடையற்ற வீடியோ பொழுதுபோக்கு அனுபவம் முதலில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். நாங்கள் விரைவில் இந்த தளத்தில் கூடுதல் ஆப்களைச் சேர்ப்போம்!” என்று தெரிவித்துள்ளார்.

பிஎஸ்என்எல்லின் சிஎம்டி திரு.பி.கே.புர்வார் கூறும்போது,  “ஓடிடி என்பது இந்தியாவில் பொழுதுபோக்கு நுகர்வுக்கான உண்மையான எதிர்காலம். இந்த வகை மற்றும் வயது பிரிவில் அதிகரித்து வரும் பார்வையாளர்கள் இந்த உண்மையை உறுதிப் படுத்துகின்றனர். மாறிவரும் போக்குகளுடன் படிப்படியாக இருப்பதற்கும், எங்கள் வாஸ் பான்-இந்தியா பயனர் தளத்திற்கு பொருத்தமான சேவைகளை வழங்குவதற்கும் உறுதியளித்த பிஎஸ்என்எல், அடுத்த தலைமுறை, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் உள்ளடக்கக் க்யூரேஷன் தளமான YuppTV ஸ்கோப்பை அறிமுகப்படுத்துவதில், YuppTVயுடன் ஒத்துழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இந்த தளம் நாட்டில் உள்ளடக்க நுகர்வில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும், ஓடிடி சகாப்தத்தில் மேலும் முன்னேறும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

YuppTV பற்றி:

தெற்காசியாவிற்கு உட்பட்ட, கண்டன்ட்களுக்கான உலகின் மிகப்பெரிய இணைய அடிப்படையிலான டிவி மற்றும் ஆன்-டிமாண்ட் சேவை வழங்கும் YuppTV, 250க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள், 5000+ திரைப்படங்கள் மற்றும் 14 மொழிகளில் 100+ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை சிறப்பாகப் பயன்படுத்துவதன் மூலம், YuppTV தனது நுகர்வோருக்கு எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், பல திரைகளின் மூலம் இணைக்கப்பட்ட தொலைக்காட்சிகள், இணைய எஸ்டிபிக்கள், ஸ்மார்ட் ப்ளூ-ரே பிளேயர், பிசிக்கள், ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் மூலம் விர்ச்சுவல் வீட்டுப் பொழுதுபோக்கின் வசதியை அனுபவிக்க உதவுகிறது.

YuppTV தற்போது வெளிநாடுகளில் வசிக்கும் தெற்காசியர்களுக்கான #1 இன்டர்நெட் பே டிவி தளமாகவும், இந்தியாவில் பிரீமியம் உள்ளடக்க கண்டண்ட்களை கொண்டிருக்கும் மிகப்பெரிய இணைய தொலைக்காட்சி தளமாகவும் உள்ளது. YuppTV அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்திய ஸ்மார்ட் டிவி ஆப் ஆகும். மேலும் 4.0 என்கிற பயனாளர் ரேட்டிங்கை பெற்றுள்ள YuppTV 13 மில்லியன் மொபைல் பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது.

YuppTV ஸ்கோப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, www.yupptvscope.com-ஐ பார்வையிடவும்.

Tags : #BSNL #YUPPTV

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. YuppTV Partners with BSNL to launch YuppTV Scope Platform Trending Now | India News.