'புதுசா கட்டின வீடு...' 'சர்ச்-க்கு போன நேரம் பார்த்து...' 'ஜன்னல் கம்பி உடச்சு...' - உள்ள புகுந்து செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தைச் சேர்ந்த ஹெப்சிபா என்பவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பொட்டல்குளம் அருகில் உள்ள சுந்தராபுரம் என்ற கிராமத்தில் புதிய வீடு கட்டி குடிபெயர்ந்து உள்ளார். அவரது பெற்றோர் மற்றும் அவரது ஆறு வயது மகளுடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் குடும்பத்துடன் தேவாலயத்திற்கு சென்றபோது வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பிகளை உடைத்து, பீரோவில் இருந்த 57 சவரன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது, ஆனால் கொள்ளை நடந்த வீடு அமைந்திருப்பது எந்த காவல்நிலைய எல்லைக்குள் வருகிறது என்பது தொடர்பாக விசாரணையை தொடங்குவதில் முதலில் இழுபறி நடந்துள்ளது.
பின்னர் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த திருட்டுச் சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
