‘மாஸ்க்’ போட்டுருக்கோம் கண்டுபிடிக்க முடியாது.. பக்கா ‘ப்ளான்’ போட்டு வந்த தாய், மகள்.. சென்னையில் நடந்த துணிகரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் பொருள்கள் வாங்குவதுபோல் நடித்து திருடிய தாய், மகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இரண்டு பெண்கள் நீண்ட நேரமாக அங்கும் இங்குமாய் சுற்றிக் கொண்டு இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் சிசிடிவி கேமராவில் சோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது பெண்கள் இருவரும் பொருட்களை ஆடைக்குள் மறைந்து திருட முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனே அவர்கள் இருவரையும் பிடித்து கடை ஊழியர்கள் சோதனை செய்ததில் பாதம், முந்திரி போன்ற பொருட்களை மறைந்து வைத்திருந்துள்ளனர். இதனை அடுத்து இருவரையும் பழவந்தாங்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அங்கு போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்த நாகஜோதி, பேச்சியம்மாள் என்பதும், இருவரும் தாய் மகள் என்பதும் தெரியவந்துள்ளது.
இதேபோல் அவர்கள் பல கடைகளில் 11 ஆயிரத்துக்கும் மேல் திருடியது விசாரணையில் அம்பலமானது. மாஸ்க் போட்டுள்ளதால் கண்டுபிடிக்க முடியாது என நினைத்துள்ளனர். ஆனால் சிசிடிவி கேமராவால் கையும் களவுமாக சிக்கிக் கொண்டனர். இதனை அடுத்து இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்
