‘இந்தியாவிலேயே 2-வது இடம் பிடித்த’... ‘சேலம் மகளிர் காவல் நிலையம்’... ‘அசத்தலான காரணம்’...
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவில் டாப் 10 காவல் நிலையங்களின் பட்டியலில் சேலம் சூரமங்கலம் காவல் நிலையம் 2-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக செயல்படும் காவல்நிலையங்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த வருடம் மணிப்பூர் மாநிலம் தவுபாலில் உள்ள நாங்போக்செக்மை காவல் நிலையம் இந்தியாவிலேயே முதலிடத்தை பிடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் சேலம் நகரில் உள்ள சூரமங்கலம் காவல் நிலையம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கர்சங் காவல் நிலையம் பிடித்துள்ளது.
நாட்டில் மொத்தமுள்ள 16 ஆயிரத்து 671 காவல் நிலையங்களில் இருந்து சிறப்பாக செயல்படும் பத்து காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. போலீஸ் நிலையங்கள் குறித்த புள்ளிவிவரங்கள், நேரடி கண்காணிப்பு, பொது மக்களின் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டு இந்த 10 போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன.
குறிப்பாக சொத்துக்கள் தொடர்பான குற்றங்களை கையாளுதல், பெண்களுக்கு எதிரான குற்றம், நலிவடைந்தோருக்கு எதிரான குற்றங்கள், ஆட்கள் காணாமல் போதல், அடையாளம் தெரியாத உடல்கள், ஒருவரை கண்டுபிடிக்கமுடியாமல் போதல் போன்ற குற்றங்களை எவ்வாறு கையாண்டார்கள் என்ற அடிப்படையில் தரவரிசை வழங்கப்பட்டது.
19 வகையான அளவுகோள் அடிப்படையில் மக்களுக்கு எவ்வாறு போலீஸ் நிலையங்கள் சேவை செய்கின்றன, குற்றங்களைக் கண்டுபிடிக்க எவ்வாறு தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து போலீஸ் நிலையங்கள் தரம் பிரிக்கப்பட்டன.
ஒட்டுமொத்தத்தில் 80 மதிப்பெண்களும், 20 சதவீதம் போலீஸ் நிலையத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மக்களிடையே எவ்வாறு பழகுகிறார்கள், அணுகுகிறார்கள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது. மேலும் கடந்த 4 வருடங்களாக டாப் 10 பட்டியலில் தமிழக காவல்துறையைச் சேர்ந்த காவல்நிலையங்கள், சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.