முகத்தை மறைக்க ‘கைலி’.. நைசாக கடைக்குள் புகுந்த 2 பேர்.. அதிரவைத்த கொள்ளை சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் கைலியால் முகத்தை மூடி செல்போன் கடைக்குள் மர்ம நபர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சிலைமான் பேருந்து நிலையம் அருகே ராஜா என்பவர் செல்போன் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடையை நடத்தி வருகிறார். கடந்த சனிக்கிழமை அவர் வழக்கம்போல பணிகளை முடித்தபின் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள், பணப்பெட்டியில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதனை அடுத்து கடையில் செல்போன்கள், பணம் திருடிபோனது பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜா, உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்து பார்த்தனர்.
அதில் தெரியாமல் இருப்பதற்காக தங்களது கைலியால் முகத்தை மறைத்துக்கொண்டு மர்ம நபர்கள் திருடியது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் செல்போன் கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
