‘சார் அந்த டிசைனை காட்டுங்க’!.. அசந்த நேரத்தில் பெண்கள் பார்த்த வேலை.. சென்னையில் நடந்த துணிகரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் நகை வாங்குவதுபோல நடத்து இரு பெண்கள் நூதன முறையில் நகைகளை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகரில் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு இரண்டு பெண்கள் வாடிக்கையாளர்கள் போல வந்துள்ளனர். அப்போது கம்மல் வாங்க வந்ததாகவும், அதற்கான டிசைன்களை காண்பிக்குமாறு சுனிலிடம் கேட்டுள்ளனர்.
இதனை அடுத்து நகைக்கடை உரிமையாளர் சுனில் பல்வேறு டிசைன்களை எடுத்து காட்டியுள்ளார். நீண்ட நேரமாக பல நகைகளை பார்த்த அப்பெண்கள், சுனில் அசந்த நேரம் பார்த்து நகைகளை எடுத்து மறைத்து வைத்துள்ளனர். இதனை அடுத்து எந்த நகைகளும் தங்களுக்கு பிடிக்கவில்லை என கூறிவிட்டு அங்கிருந்து இரு பெண்களும் சென்றுள்ளனர். அவர்கள் சென்றபின் கடை உரிமையாளரான சுனில் நகைகளை கணக்கு பார்த்துள்ளார்.
அப்போது 6 கிராம் தங்க நகை மாயமானது அறிந்து அதிர்ச்சியடைந்து, இதுதொடர்பாக திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இரு பெண்கள் நகைகளை திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளில் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
