வேலைக்கு போய்விட்டு வீடு திரும்பிய ‘தம்பதி’.. வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த ‘மர்மநபர்’.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் திருட சென்ற வீட்டில் மதுபோதையில் படுத்து தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பரங்கிமலை அடுத்த நங்கநல்லூர் அருகே தில்லைகங்கா நகரை சேர்ந்தவர் சேகர் (58), அவரது மனைவி ஆனந்தி (55). கோவையை சேர்ந்த இந்த தம்பதியினர் சென்னையில் தங்கி சமையல் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று சமையல் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே வேகமாக வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதற்கு அருகிலேயே ஒரு நபர் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதைப் பார்த்த ஆனந்தி அதிர்ச்சியில் கூச்சலிட்டுள்ளார்.
உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். இதனை அடுத்து அந்த நபரை எழுப்பியபோது அவர் மதுபோதையில் மயங்கிக் கிடந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் ஆலந்தூர் வ.உ.சி., தெருவை சேர்ந்த நாகராஜ் (36) என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நாகராஜிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
