VIDEO: 'மொதல்ல ஒரு பேக் எடுத்து டேபிள்ல வைக்குறார்...' 'ரிட்டர்ன் வர்றப்போ அங்கிருந்த...' 'தெரிய வந்துள்ள அதிர வைக்கும் உண்மை...' - பதற வைத்த சிசிடிவி காட்சி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி கல்காஜி பகுதியில் நகை கடை ஒன்றில் மர்ம நபர் ஒருவர் கொரோனா வைரஸிற்கு மருத்துவமனைகளில் பயன்படுத்தும் பி.பி.இ. கிட் அதாவது, தனிநபர் பாதுகாப்பு சாதன உடைகளை அணிந்து கொண்டு நகைக்கடைக்குள் நுழைந்துள்ளார்.
மேலும் அவருடன் கொண்டு வந்த பையை அங்கிருந்த மேஜையில் வைத்து, திரும்பி வரும்பொழுது, அங்கிருக்கும் தங்க நகைகளை எடுத்து கொண்டு வந்து பைக்குள் போடுகிறார்.
இந்த சம்பவம் குறித்தான வீடியோ, நகைக் கடைக்குள் வைக்கப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியுள்ளது. இதனைப் பார்த்த கடை ஊழியர்கள் மர்ம நபரை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நகை கடையில் கொள்ளையடித்து விட்டு தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர். மேலும், கொள்ளையடிக்க வந்த நபர் தெரிந்த இடத்திற்கு செல்வது போன்று கடைக்குள் சென்றது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படுத்தியதால், நகை கடையிலேயே பணிபுரிந்த ஊழியர் ஒருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தற்போது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.
#WATCH | A man dressed in a Personal Protective Equipment(PPE) kit engages in theft in a jewellery shop in the Kalkaji area of Delhi
Visuals from the CCTV footage of the shop pic.twitter.com/cWQph6k4IJ
— ANI (@ANI) January 21, 2021