'நான் ஒருத்தி பத்தலயா உனக்கு?'... '3 பேர் வேணுமா?'... 'கணவனைப் புரட்டியெடுத்த முதல் மனைவி'... மூன்றாவது திருமணத்தில் நடந்த சுவாரஸ்யம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Feb 13, 2020 01:59 PM

முதல் மனைவியை ஏமாற்றி, இரண்டாவது திருமணம் செய்தது மட்டுமில்லாமல், மூன்றாவது திருமணத்துக்கும் முயற்சி செய்த கணவனை, மனைவி தாக்கிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

man beaten up by first wife as he tried for third wedding

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில், ஆசிஃப் ரஃபிக் என்பவருக்கு திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த இடத்திற்குள் மதிஹா என்ற பெண் அவருடைய உறவினர்களோடு தடாலடியாக நுழைந்து, மணமகன் ரஃபிக்கை கடுமையாக தாக்கினார்.

இதைத் தொடர்ந்து, மதிஹாவை விசாரித்த போது, தான் ரஃபிக்கின் முதல் மனைவி என்றும், அவர்களுக்கு 2014ம் ஆண்டு திருமணமானதாகவும் தெரிவித்தார். மேலும், தன்னுடைய ஒப்புதல் இன்றி, ரஃபிக் இரண்டாவதாக ஒரு பெண்ணை மணந்துள்ளதாக கூறினார்.

அந்த திருமணத்துக்குப் பின், தன்னிடம் ரஃபிக் மன்னிப்பு கேட்டதாக, மதிஹா தெளிவுபடுத்தினார். இதனையடுத்து, மதிஹாவுடன் மட்டுமே இறுதி வரை வாழப்போவதாக ரஃபிக் தெரிவித்திருந்த நிலையில், மூன்றாவதாக ஒரு பெண்ணை மணக்க அவர் முயன்றுள்ளார்.  

இதை அறிந்த மதிஹா, தன்னுடைய உறவினர்களுடன் திருமண வரவேற்புக்கு வந்து, ரஃபிக்கின் ஆடைகளை கிழித்து அவரைக் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : #HUSBANDANDWIFE #WEDDING