‘என்ன யாரையும் காணோம்?’.. ‘வேலையை ஆரமிச்சுடுறா அலார்ட் ஆறுமுகம்’!’ .. ‘சாமி கும்பிட வந்தவரின்’.. ‘வேதாளம் லெவல் டிரான்ஸ்பர்மேஷன்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 09, 2020 09:01 AM

சாமி கும்பிட வந்த நபர் ஒருவர், ஆள் நடமாட்டல் இல்லாததால் அம்மன் நகைகளைத் திருடிச் சென்றுள்ள சம்பவம் சிசிடிவி காட்சிகளில் வெளியாகியுள்ளன.

man steals jewels from amman temple namakkal

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பெரியார் நகரில் அமர்ந்துள்ளது பெரிய மாரியம்மன் கோவில். இங்குள்ள கருவறையில் வீற்றிருந்த அம்மனின் கழுத்தில் இருந்த நகைகள் திருடுபோயிருந்தன. இதனால் அதிர்ந்த கோவில் நிர்வாகத்தினர், சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர்.

அப்போதுதான், சாமி கும்பிடுவதற்கு டிப்டாப்பாக வந்த நபர் ஒருவர்,  திடீரென மனம் மாறி சுற்றுமுற்றும் கோவிலில் யாரேனும் இருக்கிறார்கள் என்று வேவு பார்த்துள்ளார். பின்னர் ஒருவழியாக துணிச்சல் வந்தவர், வெகு இயல்பாக கற்ப கிரகத்துக்குள் சென்று அம்மனின் நகைகளை திருடிக்கொண்டுவிட்டு, ஆர்ப்பாட்டமே இல்லாமல் அமைதியாக நடந்த் செல்லும் காட்சிகள் சிசிடிவில் பதிவாகியதை கண்டறிந்தனர்.

உடனே பள்ளிபாளையம் போலீஸாரிடத்தில் சிசிடிவி காட்சிகளுடன் கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில், சம்மந்தப்பட்ட நபர் தேடப்பட்டு வருகிறார்.

Tags : #THEFT #NAMAKKAL #TEMPLE