‘அலறல்’ சத்தம் கேட்டு... ‘பதறிப்போய்’ ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்... ‘ஒரு வயது’ குழந்தையுடன் தாய் எடுத்த ‘விபரீத’ முடிவு... ‘சென்னையில்’ நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Mar 06, 2020 12:38 AM

சென்னையில் ஒரு வயது குழந்தையை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திவிட்டு தாய் தீவைத்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Woman Sets Herself 1 Year Old Baby On Fire In Royapettah

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பைலட் லேன் பகுதியைச் சேர்ந்த தம்பதி சத்யநாராயணன் - லதா (27). இவர்களுக்கு ஒரு வயதில் நிக்‌ஷிதா என்ற குழந்தை உள்ள நிலையில், லதா இரண்டாவது முறையாக கருவுற்று இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு ரத்தபோக்கு அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கருக்கலைப்பு நடந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய பின்னரும் அவருக்கு மீண்டும் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இன்று காலை சத்யநாராயணன் வேலைக்குச் சென்றபின், லதாவின் அத்தையும் அருகேயுள்ள கடைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு மதியம் 1 மணியளவில் கதவை தாழிட்டு வீட்டிற்குள் சென்ற லதா வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தன் மீதும் குழந்தை மீதும் ஊற்றி பற்றவைத்துக் கொண்டுள்ளார். வீட்டுக்குள் இருந்து அலறல் சத்தம் கேட்க பதறிப்போய் ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது லதா தீக்காயத்துடன் உயிரற்ற நிலையில் கிடந்துள்ளார்.

அவருக்கு அருகில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த குழந்தையை மீட்ட அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் 80% தீக்காயங்களுடன் இருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி அங்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ராயப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஒரு வயது குழந்தையுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

Tags : #CRIME #MURDER #SUICIDEATTEMPT #CHENNAI #MOTHER #BABY #FIRE