‘கல்யாணமாகி மூன்றே வருடத்தில்’... ‘தடையாக இருந்ததால்’... ‘இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’... 'தவிக்கும் 2 வயது குழந்தை'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 21, 2020 10:57 AM

ராமநாதபுரம் அருகே நகைகளை கொடுக்க மறுத்ததால், மனைவியை கொன்றதாக கூறப்பட்டநிலையில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Husband killed by strangling his wife for hindrance

ராமநாதபுரம் மாவட்டம் பனைகுளம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரன், தனலெட்சுமி என்ற இளம்பெண்ணை 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. வெளிநாட்டில் வேலைப் பார்த்து வந்த முனீஸ்வரன், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 18-ம் தேதி மனைவிடம் நகைகளை கேட்க அவர் தர மறுக்கவே, கழுத்தை நெரித்து கொலை செய்ததாக முனீஸ்வரன் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவத்தில் தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை எல்லாம் முனீஸ்வரன், தனது அண்ணியிடம் கொடுத்து வந்ததால், மனைவி தனலட்சுமி குடும்பம் நடத்தவே கஷ்டப்பட்டதாகக் கூறப்டுகிறது.

இதனால் மகளிர் சுய உதவிக் குழுவின் உதவியுடன் வீட்டில் ஓலைப்பாய் பின்னி விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு தனலட்சுமி வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். மேலும் முனீஸ்வரன் அண்ணியிடம் நெருக்கம் காட்டி வந்ததாகவும், இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து இதற்கு தடையாக இருந்த மனைவியை தீர்த்து கட்ட எண்ணி, கழுத்தை நெரித்து கொலை செய்து, தாமாக முன்வந்து சரணடைந்தது போலீசாரின் விசாணையில் தெரியவந்துள்ளது. தற்போது எதுவும் அறியாக 2 வயது பிஞ்சுக் குழந்தை, தாய் தந்தையின்றி தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது அங்கிருப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.