கொரோனா ‘செக் அப்’!.. பயந்து பாத்ரூமில் ஒளிந்தாரா பாலிவுட் பாடகி?.. வெளியான பரபரப்பு தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் நடிகை கனிகா கபூர் விமான நிலையத்தின் கொரோனா பரிசோதனையில் இருந்து தப்பிக்க பாத்ரூமில் ஒளிந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாடகி கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் பிரபலம் இவர்தான். கடந்த மார்ச் 11ம் தேதி லண்டனில் இருந்து மும்பைக்கு விமானத்தில் திரும்பியுள்ளார். வைரஸ் அறிகுறி இருந்தும் அதனை பொருட்படுத்தாமல் பல்வேறு இடங்களுக்கு சென்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் 3 முக்கிய விருந்துகளில் கனிகா கபூர் கலந்து கொண்டுள்ளார். இந்த விருந்துகளில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் அமைச்சர் அக்பர் அஹமது டம்பியின் வீட்டில் நடந்த விருந்து ஒன்றில் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவும், அவரது மகன் துஷ்யந்த் சிங்கும் கலந்து கொண்டனர். இதனை அடுத்து கனிகா கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும், தானும் தனது மகனும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டதாக வசுந்தரா ராஜே ட்வீட் செய்தார்.
कुछ दिन पहले दुष्यंत और उनके ससुराल वालों के साथ मैं लखनऊ में एक डिनर पर गयी थी। कनिका कपूर, जो कि #Covid19 संक्रमित पाई गई हैं, वें भी उस डिनर में बतौर अतिथि मौजूद थीं।
सावधानी के तौर पर मैं और दुष्यंत सेल्फ़-आइसोलेशन में हैं और हम सभी आवश्यक निर्देशों का पालन कर रहे हैं।
— Vasundhara Raje (@VasundharaBJP) March 20, 2020
இந்த நிலையில் கனிகா கபூர் விமான நிலையத்தில் கொரோனா சோதனையில் இருந்து தப்பயது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில், விமானத்தில் இருந்து வந்த பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது கனிகா கபூர் பாத்ரூமில் ஒளிந்துகொண்டதாகவும், பின்னர் பணம் கொடுத்து அங்கிருந்து பரிசோதனை செய்யாமல் வெளியேறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
My colleague @ShivendraAajTak has learnt that #KanikaKapoor escaped screening at Lucknow airport, by colluding with authorities on ground and hiding in the washroom.
Time to find & penalise these others culpable too. https://t.co/eelFClXFvG
— Poulomi Saha (@PoulomiMSaha) March 20, 2020
