காதலியின் ‘உடலை’ முன் இருக்கையில் வைத்து... ‘காரில்’ ஊர் ‘சுற்றிய’ இளைஞர்... ‘திடீரென’ நுழைந்தவரைப் பார்த்து ‘உறைந்துநின்ற’ போலீசார்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Mar 16, 2020 10:23 PM

துபாயில் காதலியைக் கொலை செய்து அவருடைய உடலைக் காரில் வைத்து ஊர் சுற்றிய இந்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Indian Man Killed Lover Drove Around Dubai With Her Body

துபாயில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் தனது காதலியை கொலை செய்து, அவருடைய உடலை தன்னுடைய காரில் வைத்து சுமார் 45 நிமிடங்கள் சுற்றியுள்ளார். அதன்பிறகு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று சரணடைந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

அப்போது அங்கு பேசிய போலீசார், “ஸ்டேஷனுக்குள் அவர் நுழைந்தபோதே எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவருடைய உடை முழுவதும் ரத்தமாக இருந்ததுடன் அவர் மிகவும் பயந்தபடியே வந்தார். எங்களிடம் தனது காதலியைக் கொலை செய்துவிட்டதாகவும், அவருடைய உடல் காரில் இருப்பதாகவும் கூறினார். அதைக்கேட்டதும் நாங்கள் வெளியே சென்று பார்த்தபோது, கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் காருடைய முன் இருக்கையில் இருந்தது.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் 5 ஆண்டுகளாகக் காதலித்தது தெரியவந்தது. ஆனால், கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண் அந்த இளைஞரை ஏமாற்றிவிட்டு வேறு சில ஆண்களுடன் பேசி வந்ததாக அவர் கூறினார். இந்நிலையில் புர்ஜூமான் என்ற ஷாப்பிங் சென்டருக்கு அருகில் அவர்கள் சந்தித்தபோது காரில் இருவருக்கும் இடையே 2 மணிநேரம் கடுமையான விவாதம் நடைபெற்றுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த அந்த இளைஞர் முதலில் அவருடைய மார்பிலும், பின்னர் தொண்டைப் பகுதியிலும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அதன்பிறகு அருகிலுள்ள உணவகத்திற்குச் சென்று உணவு, தண்ணீர் ஆகியவற்றை வாங்கிவிட்டு, காரில் காதலியின் உடலுடன் சுமார் 45 நிமிடங்கள் நகரத்தைச் சுற்றி வந்துள்ளார். இறுதியாக சரணடைய முடிவு செய்த அவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சரணடைந்து, கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே, உங்களுடைய மகள் என்னை ஏமாற்றிவிட்டாள், இந்த விஷயத்தில் எனக்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை என்றால் அவளைக் கொன்று விடுவேன் எனக் காதலியின் குடும்பத்திற்கு அவர் மெயில் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அந்த மெயில்களின் நகல்களை அவர் ரத்தக்கறைகளுடன் கொடுத்தபோது அதைப்பார்த்து நாங்கள் அதிர்ந்து போய்விட்டோம்” எனக் கூறியுள்ளனர். மேலும் அவருக்கு மரண தண்டனை விதிக்க அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இதுதொடர்பான விசாரணையை மார்ச் 24ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

Tags : #CRIME #MURDER #POLICE #DUBAI #LOVER #DEADBODY #CAR