‘அசுர வேகத்தில்’ வந்த காரால்.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’.. ‘சென்னை அருகே கோர விபத்து’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 23, 2019 06:41 PM

சென்னையில் அசுர வேகத்தில் வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 dead in Car Bike accident near Ambattur chennai

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர் அதேபகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் மாதவரம் நோக்கி சென்றுள்ளார். அப்போது பின்னால் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று அவர்கள்மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இதில் படுகாயடைந்த டில்லிபாபு மற்றும் ஆனந்தன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் இருவரது உடலையும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்தின்போது பதிவான சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #CHENNAI #AMBATTUR #ACCIDENT #CAR #TWOWHEELER