‘நள்ளிரவில் பைக்கில்’... ‘ஹெல்மெட் அணியாமல்’... 'இளைஞர்களுக்கு நேர்ந்த பயங்கரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 26, 2019 03:09 PM

திருவண்ணாமலை அருகே 3 இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனத்தை மோதிவிட்டு, வாகனம் ஒன்று நிற்காமல் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

youngster met accident near thiruvannamalai 3 died

தண்டராம்பட்டு அடுத்த திருவடத்தனூரை சேர்ந்தவர் 20 வயதான தாகீர். அதேப் பகுதியை சேர்ந்தவர்கள் காலித் (25) மற்றும் ஷாஜித் (24). இவர்கள் 3 பேரும் நள்ளிரவு, திருவண்ணாமலையில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். கீழ்சிறுப்பாக்கம் என்ற இடத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. எதிர்பாரதவிதமாக வாகனம் மோதியதில், பைக்கில் இருந்து 3 பேரும் தூக்கிவீசப்பட்டனர். இதில் கலித், ஷாகிர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், படுகாயங்களுடன் திருவண்ணாமலை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாகித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரே வாகனத்தில் 3 பேர் சென்றதும், தலைக் கவசம் அணியாததும் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த தண்ராம்பட்டு போலீசார், விபத்தை ஏற்படுத்திச் சென்ற வாகனம் மற்றும் நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #THIRUVANNAMALAI