‘ஃபேஸ்புக் நண்பரால்’.. ‘பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்’.. ‘வீடியோவை வைத்து மடக்கிப் பிடித்த போலீஸ்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 29, 2019 06:37 PM

தெலுங்கானாவில் பள்ளி மாணவி ஒருவர் ஃபேஸ்புக் நண்பரால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Facebook friend kills Class 10 girl in Telangana

தெலுங்கானா மகபூப் நகரைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் நவீன் ரெட்டி என்ற இளைஞருக்கும் இடையே ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 27ஆம் தேதி சங்கரயபள்ளி குடியிருப்பு காலனிக்கு அருகே உள்ள பாழடைந்த இடத்திற்கு பின்னால் இருவரும் தனியாக சந்தித்துள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த நவீன் அந்த சிறுமியை கீழே தள்ளியுள்ளார். இதில் நிலை தடுமாறி விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சிறிது நேரத்திலேயே தலையிலிருந்து அதிக ரத்தம் வெளியேறியதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையே சிறுமியைக் காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் அவரைத் தேடி வந்துள்ளனர். அப்போது விசாரணையில் சிறுமி நவீனுடன் செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளது. அதை வைத்து போலீஸார் அவரை பிடித்து விசாரித்ததில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து நவீனை கைது செய்த போலீஸார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Tags : #TELANGANA #SCHOOL #STUDENT #GIRL #FACEBOOK #FRIEND #MURDER #CCTV #VIDEO