‘அதிவேகத்தில் வந்த லாரி’... ‘குறுக்கே வந்த இருசக்கர வாகனம்’... ‘சென்னையில் பதைபதைக்க வைக்கும் சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 23, 2019 09:07 AM

சென்னையில், சாலையைக் குறுக்கே கடக்க முயற்சித்த இருசக்கர வாகனம் ஒன்று, பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளான பதைபதைக்க வைக்கும் நடைபெற்றுள்ளது.

accident in chennai 2 heavy injured cctv footage released

சென்னை புழல் சிறைக்கு அருகேயுள்ள போக்குவரத்து சிக்னல் அருகே, வடமாநில பதிவெண் கொண்ட சரக்கு லாரியொன்று அதிவேகமாக வந்துள்ளது. அப்போது அதனைக் கவனிக்காமல், இரண்டு பேருடன் இருசக்கர வாகனமொன்று சாலையின் குறுக்கே சென்றது. இதையடுத்து வேகமாக வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதி, இருவரையும் தூக்கி வீசியது.

போலீசார் நடத்திய விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கணபதி தோட்டம் பொன்னியம்மன்மேட்டைச் சேர்ந்த கணேசசாமி மற்றும் அகரம் பகுதியைச் சேர்ந்த ராசு என்பது தெரியவந்தது. படுகாயமடைந்த இருவரும் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். லாரி ஓட்டுநர் காவல் நிலையத்தில் சரண் அடைந்ததாக கூறப்படும் நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : #CHENNAI #ACCIDENT #INJURED