‘அசுர வேகத்தில் வந்த லாரி’.. ‘நொடியில் நடந்த பயங்கர விபத்து’.. ‘16 பேர் உடல் நசுங்கி பலியான சோகம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 27, 2019 03:10 PM

உத்தரப்பிரதேசத்தில் வேன்களின் மீது லாரி கவிழ்ந்த கோர விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 

UP Major accident 16 dead as truck overturns on 2 vehicles

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி ஒன்று அசுர வேகத்தில் சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி அருகில் சென்று கொண்டிருந்த 2 வேன்களின் மீது கவிழ்ந்துள்ளது. இதில் வேனில் இருந்த 3 குழந்தைகள், ஒரு பெண் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து குறித்து உடனடியாக போலீஸாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் விபத்து குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Tags : #UTTARPRADESH #MAJOR #ROAD #ACCIDENT #16DEAD #LORRY #VAN