பட்டப்பகலில் முகத்தில் கர்ஷிப் கட்டிக்கொண்டு இளைஞர் செய்த செயல்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 27, 2019 09:01 AM

பட்டப்பகலிலில் இளைஞர் ஒருவர் கடையின் ஷட்டரை திறந்து பணத்தை திருடிச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youth steal money from Rubber shop in Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் திருவரம்பில் கண்மணி என்பவர் ரப்பர் ஷீட் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியவேளையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் மூடியிருந்த கடையின் ஷட்டரைத் திறந்து பணத்தை திருடி சென்றுள்ளார். இது கடைக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கடைக்கு திரும்பிய உரிமையாளர் பணம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள வீடியோ காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் கடைக்குள் நுழைந்து மர்ம நபர் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CCTV #YOUTH #THEFT #KANNIYAKUMARI #STEAL