‘தேங்காய் லோடு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து’.. தூக்க கலக்கத்தில் லாரி ஓட்டியதால் 3 பேர் பலியான பரிதாபம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Aug 26, 2019 10:07 PM

கேரளாவுக்கு தேங்காய் லோடு என்ற சென்ற லாரி விபத்துக்குள்ளாகி தமிழகத்தை சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Three persons were killed after a lorry overturned in Kerala

தமிழகத்தில் இருந்து கேரளாவில் உள்ள கோட்டயத்துக்கு  நேற்று தேங்காய் ஏற்றிக் கொண்டு லாரி சென்றுள்ளது. இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் வஞ்சாகனம் என்னும் பகுதியில் லாரி சென்றுகொண்டு இருந்துள்ளது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதில் லாரியில் பயணித்த மதுரையைச் சேர்ந்த சுப்பிரமணி, தினேசன், பூமி ராஜன் ஆகிய மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து விபத்து நடந்த பகுதிக்கு விரைந்த சென்ற போலீசார் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்துள்ளனர். மேலும் மூவர் உடலையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். டிரைவர் தூக்கக் கலக்கத்தில் லாரியை ஓட்டி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : #ACCIDENT #LORRY #KILLED #OVERTURNED #KERALA