‘கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து’ திருமணமான சில நிமிடத்தில் உயிரிழந்த ஜோடி..! சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Aug 25, 2019 02:42 PM

திருமணமான சில நிமிடங்களில் லாரி மோதி தம்பதியரினர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newlyweds killed in tragic accident minutes after getting married

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியைச் சேர்ந்த ஹார்லி மோர்கன் என்பவர் பவுட்ரியாக்ஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். அதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரஞ்ச் கவுண்டி என்ற நீதிமன்றத்தின் நீதிபதியின் முன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணம் முடிந்தபின் வெளியில் நிறுத்தப்பட்டிள்ள காரில் ஏறியுள்ளனர். அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த லாரி ஒன்று இவர்களது காரின் மீது பலமாக மோதியுள்ளது. இதனால் அந்த கார் உருண்டு பலத்த விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் திருமண ஜோடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குடும்பத்தினர் கண்முன்னே திருமண ஜோடி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விபத்து தொடர்பாக தெரிவித்த மோர்கனின் தாய், ‘அவர்களது திருமணத்துக்கு வாழ்த்த வந்தேன். அவர்களுக்கு நிறைய கனவு இருந்தது. இப்போது எல்லாம் போய்விட்டது’ என சோகமாக தெரிவித்துள்ளார்.

Tags : #ACCIDENT #NEWLYWEDS #KILLED #AMERICA